OUR CLIENTS
கண்டுகொள்ளாத ஆணையர்!
கண்டுகொள்ளாத ஆணையர்! Posted on 26-Mar-2019 கண்டுகொள்ளாத ஆணையர்!

பூவிருந்தவல்லி, மார்ச் 26-

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த ஆவடி நகராட்சியில் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது.

ஆவடி நகராட்சியில் குடிநீருக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொறுத்தி ஓரிரு ஆண்டுகள் ஆகிறது. தற்போது கடந்த ஆறு மாதங்களாக செயல் இழந்து பழுதடைந்து இருக்கிறது. இதனால் ஆவடி நகராட்சிக்கு வரும். 
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். கோடை தொடங்கியும் பழுது நீக்கவில்லை. இந்த நகராட்சிக்கு ஆதார் அட்டை மற்றும் பிறப்பு, இறப்பு சான்று வரி செலுத்த மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் புகார்கள் குறித்தும் தெரிவிக்கவும், பல அலுவல் காரணமாகவும் இந்த அலுவலகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தண்ணீர் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மனமில்லாத அதிகாரிகள் இங்கு அதிகம் இருக்கின்றனர். இதனை பலமுறை ஆவடி நகராட்சி ஆணையர் ஜோதிகுமாரிடம் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. இதுதொடர்பாக இவரிடம் விசாரித்தால் நகராட்சியில் பணம் பற்றாக்குறை என்று கூலாக பதில் கூறுகிறார். ஆனால் தற்போது இவர் பயணம் செல்வதற்காக புதிய சொகுசு வாகனம் பல லட்சக்கணக்கில் வாங்கப்பட்டுள்ளது. தண்ணீரை விட இவருக்கு இந்த சொகுசு வாகனம் முக்கியமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நமக்கென்ன யார் எக்கேடு கெட்டால் என்று  தானுண்டு தனது வேலை உண்டு என்று வலம் வருகிறார் ஆணையர் ஜோதிகுமார்.  இந்தநிலை தொடர்ந்தால் மிகவும் ஆபத்தான நிலையில்  ஆவடி நகராட்சி நிர்வாகம் தள்ளப்படும் என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.  நிலைமை விபரீதமாவதற்குள்  விழித்து கொள்வாரா நகராட்சி ஆணையர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label