OUR CLIENTS
சாராயம் விற்ற தம்பதி உள்பட 5 பேர் கைது !
சாராயம் விற்ற தம்பதி உள்பட 5 பேர் கைது ! Posted on 26-Mar-2019 சாராயம் விற்ற தம்பதி உள்பட 5 பேர் கைது !

நாகப்பட்டினம், மார்ச் 26-

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற கணவன்& மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் மதுகடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்  கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த  ஆந்தகுடி ரோட்டு தெருவைசேர்ந்த சிவக்குமார் (40) மற்றும் அவருடைய மனைவி கண்ணகி (35), சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (39), பெங்கடம்பனூர் காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாதவன் (28), மில்லடி தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் சக்திவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 250 லிட்டர் சாராயத்தையும், 6 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Label