OUR CLIENTS
பொள்ளாச்சி சம்பவம் - பார் நாகராஜன், திமுக பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்
பொள்ளாச்சி சம்பவம் - பார் நாகராஜன், திமுக பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் Posted on 26-Mar-2019 பொள்ளாச்சி சம்பவம் - பார் நாகராஜன், திமுக பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்

பொள்ளாச்சி, மார்ச் 26-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் மற்றும் பார் நாகராஜன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணையின் அடிப்படையில் பலருக்கு சம்மன் அனுப்பி வருகின்றனர் நக்கீரன் கோபால், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே தொடர்புபடுத்தப்பட்டு வரும் பார் நாகராஜன், திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பார் நாகராஜனும், தென்றல் மணிமாறனும் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்த திருநாவுக்கரசுடன் ஃபேஸ்புக் நண்பர்களாக உள்ள புகைப்படங்கள் வெளியான நிலையில் இருவருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

Label