OUR CLIENTS
இந்திய எல்லையில் அத்துமீறி ஊடுறுவிய பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லையில் அத்துமீறி ஊடுறுவிய பாகிஸ்தானியர் கைது Posted on 26-Mar-2019 இந்திய எல்லையில் அத்துமீறி ஊடுறுவிய பாகிஸ்தானியர் கைது

புதுடில்லி, மார்ச் 26-

குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லையில் அத்துமீறி ஊடுறுவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள குமார் எல்லை முகாமை சேர்ந்த வீரர்கள் திங்கள்கிழமை மாலை ரோந்தில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தானியர் ஒருவர் பிடிப்பட்டார்.
சிந்தி மொழியில் பேசிய அந்த பாகிஸ்தானியரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முகமது அலி (35) என்று தெரியவந்தது.
முகமது அலியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த இன்று பாலசார் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். முகமது அலியிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
இந்த மாதம் இந்திய எல்லைக்குள் ஊடுறுவிய இரண்டாவது பாகிஸ்தானியர் இவர். 
இதற்கு முன் மார்ச் 6ம் தேதி 30 வயது பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய எல்லையில் ஊடுறுவ முயன்று எல்லை பாதுகாப்பு படையினரால் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Label