OUR CLIENTS
கிறைஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலால் சீன பயணத்தை 2 நாட்களாக குறைத்த நியூசிலாந்து பிரதமர்
கிறைஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலால் சீன பயணத்தை 2 நாட்களாக குறைத்த நியூசிலாந்து பிரதமர் Posted on 26-Mar-2019 கிறைஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலால் சீன பயணத்தை 2 நாட்களாக குறைத்த நியூசிலாந்து பிரதமர்

வெல்லிங்டன், மார்ச் 26-

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அடுத்த வாரம் தன் முதல் சீன பயணத்தை மேற்கொள்கிறார். அதேசமயம் உலகை உலுக்கிய கிறைஸ்ட் சர்ச் மசூதி தாக்குதல் காரணமாக தன் சீன பயணத்தின் கால அளவை இரண்டு நாளாக குறைத்துள்ளார்.

கடந்த மார்ச் 15ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரின் இரு மசூதிகளில் நடந்த தாக்குதலில் 5 இந்தியர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் காரணமாக நியூசிலாந்தில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் முன்பே திட்டமிட்டிருந்த சீன பயணத்தை தொடர பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முடிவு செய்துள்ளார். அதேசமயம் நீண்ட நாட்களுக்கு திட்டமிட்டிருந்த அவரது பயணம் இரண்டு நாள் பயணமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் 31ம் தேதி சீனாவிற்கு செல்லும் பிரதமர் ஜெசிந்தா திங்கள்கிழமை அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தலைவர்களுடனான சந்திப்பை முடித்து கொண்டு ஏப்ரல் 2ம் தேதி நாடு திரும்புகிறார்.
‘‘தற்போதுள்ள சூழ்நிலையில் நீண்ட நாள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது முறையல்ல என்பதால் சீன பயணத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுடனான உறவுக்கு நியூசிலாந்து அதிக முன்னுரிமை அளிக்கிறது’’ என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் முதல் சீன பயணம் இது.

Label