OUR CLIENTS
பாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
பாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது Posted on 26-Mar-2019 பாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

சென்னை, மார்ச் 26-

பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.
அந்த வகையில் இதுவரை பாராளுமன்ற தேர்தலுக்காக 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 திருநங்கைகளின் மனுக்களும் அடங்கும்.
அதேபோல 18 சட்டசபை இடைத்தேர்தலுக்காக இதுவரை 230 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது

Label