OUR CLIENTS
நான் பிராமணன் காவலாளி ஆக முடியாது சுப்பிரமணியன் சுவாமி பேச்சால் சர்ச்சை
நான் பிராமணன் காவலாளி ஆக முடியாது சுப்பிரமணியன் சுவாமி பேச்சால் சர்ச்சை Posted on 26-Mar-2019 நான் பிராமணன்  காவலாளி ஆக முடியாது சுப்பிரமணியன் சுவாமி பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி, மார்ச் 26-

நான் பிராமணன் என்பதால் காவலாளி ஆக முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரச்சாரத்தை பாஜகவினர் தொடங்கினர். இந்நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். இவரை பின்பற்றி அமித்ஷா, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது.
இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் கடமையாகும். இதைத்தான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.

Label