OUR CLIENTS
செத்துக் கிடக்கும் உடல்கள் வெள்ள நீரில் பாம்புகள் மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்! மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்!
செத்துக் கிடக்கும் உடல்கள் வெள்ள நீரில் பாம்புகள் மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்! மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்! Posted on 26-Mar-2019 செத்துக் கிடக்கும் உடல்கள்  வெள்ள நீரில் பாம்புகள் மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்! மொசாம்பிக்கை புரட்டிப் போட்ட இடாய் புயல்!

மொசாம்பிக்கை, மார்ச் 26-

ஆப்ரிக்க கண்டத்தை கடந்த வாரம் தாக்கிய இடாய் புயலில் கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் 417 பேர் பலியாகினர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், மனித உடல்களும், வெள்ள நீர்களில் பாம்புகளும் அதிகமாக இருப்பதால்,  அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த வாரம் மணிக்கு 170 கி.மீ., வேகத்தில் இடாய் புயல் ஆக்ரோஷமாக தாக்கியது.
இந்தப் புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 417 பேர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளனர். இதுவரை, சுமார் 2000 பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் அந்நாட்டு பேரிடர் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், இறந்தவர்களின் சடலங்கள் கொத்துக் கொத்தாக ஆங்காங்கு கிடக்கின்றன, நீரில் பாம்புகள் அதிகளவில் மிதப்பதால், குழந்தைகளுடன் வசிக்க முடியாமல் தவிப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள்  கோரிக்கைகள் வைத்துள்ளனர். மொசாம்பிக்கில், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தங்களின் இருப்பிடங்களை விடுத்து மேடான பகுதிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மொசாம்பிக்கை போலவே ஜிம்பாப்வே, மால்வா பகுதிகளையும் இடாய் புயல் புரட்டிப்போட்டது. இந்தப் புயல் பாதிப்புக்கு இதுவரை 732 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Label