OUR CLIENTS
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் Posted on 26-Mar-2019 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள்

சென்னை, மார்ச் 26-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் உண்டு,உறைவிட வசதியுடன் நேற்று தொடங்கின.

கடந்த செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட 23 ஆயிரம் மாணவர்களில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தற்போது தொடங்கியுள்ள பயிற்சிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.  மே 3ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள 11 தனியார் கல்லூரிகளின் வளாகத்தில் காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் அனுபவம் பெற்ற பேராசிரியர்கள், வெளிமாநில நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த பயிற்சிக்கு தேர்வாகாத மாணவர்கள், 
விசாட் தொழில்நுட்பம் மூலம், காணொலிக் காட்சி வாயிலாக 412 மையங்களில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

Label