OUR CLIENTS
முன்னாள் அமைச்சரின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
முன்னாள் அமைச்சரின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு! Posted on 26-Mar-2019 முன்னாள் அமைச்சரின்  சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

சென்னை, மார்ச் 26-

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பொதுச் சொத்துகளை சேதப் படுத்திய வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி மீதான விசாரணைக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஒசூர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label