OUR CLIENTS
ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது திமுக தலைவர் ஸ்டாலின்
ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது திமுக தலைவர் ஸ்டாலின் Posted on 26-Mar-2019 ராதாரவியின் கருத்து கண்டனத்திற்குரியது திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 26-

ராதாரவியின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில், ராதாரவியை திமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் இது பற்றி கூறுகையில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது.
கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின்  தெரிவித் துள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!
முன்னதாக நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம் பேசுகையில்; கொலையுதிர் காலம் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
நான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப் பட்டது என நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்
மேலும் என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என ராதாரவி தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் நடிகை நயன்தாராவை விமர்சித்து பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ராதாரவி தொடர்ந்து இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால்,  தொழில்தொடர்பான ஒத்துழைப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாக எச்சரிக்கை தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்தார்.

Label