OUR CLIENTS
மக்களிடம் பலவந்தமாக பணத்தை பறித்தவர் பிரதமர் மோடி! மு.க.ஸ்டாலின் பலமான குற்றச்சாட்டு
மக்களிடம் பலவந்தமாக பணத்தை பறித்தவர் பிரதமர் மோடி! மு.க.ஸ்டாலின் பலமான குற்றச்சாட்டு Posted on 26-Mar-2019 மக்களிடம் பலவந்தமாக பணத்தை பறித்தவர் பிரதமர் மோடி!   மு.க.ஸ்டாலின் பலமான குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 26-

மக்களிடம் பலவந்தமாக 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறித்த பிரதமர் மோடி, தற்போது வாக்குகளைப் பறிக்க வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக சார்பில் வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்க, தான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் 9 மேம்பாலங்களை 90 கோடியில் கட்ட திட்டமிட்டு 60 கோடி ரூபாயில் கட்டி முடித்தாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பொருளா தாரத்தில் முன்னேற்றம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி மக்களுக்கு எதையும் செய்யவில்லை என விமர்சித்தார்.
பாஜக ஆட்சியில் ஊழலே இருக்காது என்று சொன்னீர்களே, ரபேல் விவகாரம் ஒன்று போதாதா என ஸ்டாலின் வினவினார். 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கூறி, மக்களிடம் பலவந்தமாக பணத்தை பறித்த பிரதமர் மோடி, தற்போது வாக்குகளை பறிக்க வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 
பணம் பறிப்பது மோசடித்தனம் என்றும், பொய் சொல்லி வாக்குகளை பறிக்க வந்திருப்பதை மோடித்தனம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Label