OUR CLIENTS
போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை Posted on 26-Mar-2019 போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை

மதுரை, மார்ச் 26-

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 17வது குற்றவாளி முன்னாள் ஏ.டி.எஸ்.பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை மதுரை தினகரன் நாளிதழ் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியிட்டது.
அது மு. க.ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்ததால் ஆத்திரமடைந்த அழகிரி ஆதரவாளர்கள் நாளிதழ் அலுவலகத்துக்கு தீ வைத்தனர். இதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேருக்கு கடந்த 21ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
வன்முறையை தடுக்கத் தவறியதாக அப்போது டி.எஸ்.பியாக இருந்த ராஜாராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. நேற்று ராஜாரமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Label