OUR CLIENTS
அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் மற்றொரு ஏஜெண்ட் கைது
அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் மற்றொரு ஏஜெண்ட் கைது Posted on 26-Mar-2019 அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் மற்றொரு ஏஜெண்ட் கைது

புதுடில்லி, மார்ச் 26-

அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் டில்லியை சேர்ந்த பாதுகாப்பு ஏஜெண்ட், சுஷென் மோகன் குப்தாவை அமலாக்கத்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ராஜீவ் சக்சேனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை இந்த ஊழலில் இடைதரகர்களாக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், ராஜீவ் சக்சேனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாறினார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களில் தொடர்புடைய டில்லியை சேர்ந்த இடைத்தரகர் சுஷென் மோகன் குப்தா என்பவர் அமலாக்கத்துறையால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.
அகஸ்தா வெஸ்ட்லாண்ட் உட்பட பல ஒப்பந்தங்களில் சுஷென் மோகன் குப்தா இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். அகஸ்தா வெஸ்ட்லாந்த் ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான சில ஆவணங்கள் சுஷென் மோகன் குப்தாவிடம் இருந்தன என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சுஷென் மோகன் குப்தா இன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜர்ப்படுத்தப்படுவார் என்று அமலாக்கத்துறையினர் கூறினர்.

Label