OUR CLIENTS
அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி மக்களவை - சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு
அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி மக்களவை - சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு Posted on 26-Mar-2019 அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி மக்களவை - சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு

சென்னை, மார்ச் 26-

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு என கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். சரத்குமாரிடம் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் ஆதரவு கோரியதை அடுத்து முதலமைச்சருடன் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் காலியாக உள்ள தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு, சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது:
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.
அஇஅதிமுக - அதன் தலைமையிலான கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என சரத்குமார் கூறினார்.

Label