OUR CLIENTS
ஐபிஎல் கிரிக்கெட் - சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் - சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு Posted on 26-Mar-2019 ஐபிஎல் கிரிக்கெட் - சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

புதுடெல்லி, மார்ச் 26-

ஐபிஎல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 12-வது சீசனின் இன்றைய ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் டாசை சுண்டி வெற்றி பெற்றார். இதையடுத்து, தனது அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டிரென்ட் போல்ட் பதிலாக அமித் மிஸ்ரா இடம் பிடித்துள்ளார்.
சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:
வாட்சன், அம்பதி ராயுடு, ரெய்னா, டோனி, ஜடேஜா, கேஜர் ஜாதவ், பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், சாஹர், சர்துல் தாகூர்.
டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:
பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கொலின் இங்கிராம், கீமோ பால், அக்சார் பட்டேல், ராகுல் டெவாட்டியா, ரபாடா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா. 

Label