OUR CLIENTS
பாரதீய ஜனதாவில் இணைந்தார் நடிகை ஜெயபிரதா
பாரதீய ஜனதாவில் இணைந்தார் நடிகை ஜெயபிரதா Posted on 26-Mar-2019 பாரதீய ஜனதாவில் இணைந்தார் நடிகை ஜெயபிரதா

புதுடெல்லி, மார்ச் 26-

நடிகை ஜெயபிரதா பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெயபிரதா. கடந்த 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர், சமாஜவாதி கட்சியில் இணைந்தார் ஜெயபிரதா. மேலும் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். ஆனால், கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி கடந்த 2010-ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாஜகவில் இணைந்தார் ஜெயபிரதா
டில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய செயலர் பூபேந்தர் யாதவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி ஆகியோர் முன்னிலையில் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா பாஜகவில் தன்னை இன்று இணைத்துக்கொண்டார்.

Label