OUR CLIENTS
வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம்-ராகுல் காந்தி
வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம்-ராகுல் காந்தி Posted on 26-Mar-2019 வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெய்ப்பூர், மார்ச் 26-

நாட்டிலிருந்து வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சுரட்கர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
21ம் நூற்றாண்டில் தேசத்தில் யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது. வறுமை மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, 20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ 6 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். இந்த தொகை அந்த ஏழை குடும்பத்தின் தலைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நாட்டில் இருந்து வறுமையை விரட்டியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வறுமையை விரட்டியடிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம். இதன்மூலம் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் வறுமையில் வாட மாட்டார்கள். எந்த நாடும் இதுபோன்ற முயற்சியை எடுக்கவில்லை.
மக்களின் பணத்தைத் திருடி நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு வழங்கி பாஜக அரசு உதவி செய்கிறது. அவர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது, ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
கடந்த தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், யாருக்கும் வேலை வழங்கவில்லை, பணமும் டெபாசிட் செய்யவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பணக்காரர்களுக்கு பணத்தை அள்ளி வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு மட்டுமே பணத்தை தரும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 14 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்

Label