OUR CLIENTS
போடியில் ஓராண்டிற்குள்  உடைந்த தரைப்பாலம்!
போடியில் ஓராண்டிற்குள்  உடைந்த தரைப்பாலம்! Posted on 27-Mar-2019 போடியில் ஓராண்டிற்குள்  உடைந்த தரைப்பாலம்!

போடி, மார்ச் 27-

 போடியில் பாலம் கட்டி ஓராண்டுக்குள் உடைந்து கிடக்கிறது. இப்பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போடியில் உள்ள 25வது வார்டு பகுதியில் நந்தவனம், சின்ன சவுடம்மன்கோயில் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும், அரசு உதவி பெறும் பள்ளியும் உள்ளது. நந்தவனம் சின்ன சவுடம்மன்கோயில் சாலையின் குறுக்கே அகன்ற சாக்கடை உள்ளது. அதன் மேல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் புதிய பாலம் அமைக்கப்பட்டது. இச்சாலையின் வழியாக கார்கள் ஆட்டோக்கள், டூவீலர்கள் அடிக்கடி கடக்கும். அத்துடன் பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். இந்த பாலம் அருகில் பள்ளியும், தண்ணீர் நிரப்பும் தொட்டியும் உள்ளன. இந்த பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டதால், பாலத்தில் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் இதில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இரவு நேரங்களில் நடந்து வருபவர்களும் விபத்தில் சிக்கும் சூழல்நிலை உள்ளது. இப்பாலத்தால் உயிர்பலி ஏற்பட்டுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label