OUR CLIENTS
மனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா?
மனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? Posted on 27-Mar-2019 மனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா?

கரூர், மார்ச் 27-

 வேட்பு மனு தாக்கலுக்காக அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை வாகனங்களில் அழைத்து வந்து பணத்தை வாரி இறைத்துள்ளதால் கரூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு மதுபாட்டில், பணம் வினியோகம் செய்யப்பட்டதாக 2016ல் நடக்க இருந்த சட்டசபை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்., 18ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை, தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் ஜோதிமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருவரும் நேற்றுமுன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தனர். இதற்காக வேட்பாளர் தம்பிதுரை, அமைச்சர் விஜய பாஸ்கருடன் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றார். தி.மு.க., கூட்டணி கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகம், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்றுமுன்தினம் காலை திறக்கப்பட்டது. அதில் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் நேரு, சக்கரபாணி, காங்., வேட்பாளர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றார் ஜோதிமணி. இரு வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாகவும் கூட்டமாகும் இருந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் சார்பில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனால் கரூர் - கோவை சாலை, உழவர் சந்தை சாலை, கலெக்டர் அலுவலக சாலை முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
அச்சாலைகளில் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை தேர்தல் பிரிவு செலவின பார்வையாளர்கள் குழுவினர், வீடியோ எடுத்தனர்.விதிமுறைகள் மீறல்கரூரில் தேர்தல் கமிஷன் விதிமுறைகளை அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பின்பற்றுவதாக தெரியவில்லை. பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் அனைத்து கட்சி கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. பணம் கொடுத்து, வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்ததை தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
கடந்த 2016ல் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அ.தி.மு.க., - தி.மு.க., என இரு கட்சிகளுமே போட்டி போட்டு தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றன. இதனால் கரூர் லோக்சபா தொகுதிக்கு திட்டமிட்டப்படி ஏப்., 18ல் தேர்தல் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Label