OUR CLIENTS
தேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு!
தேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு! Posted on 27-Mar-2019 தேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு!

திண்டிவனம், மார்ச் 27-

தேர்தல் பிரசாரத்தால் திண்டிவனம் கிராமப் புறங்களில் கூலி ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கத்திரி, வெண்டக்காய், மிளகாய் என காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் காய்கறி சாகுபடியில் விவசாய கூலிகள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கணிசமாக குடும்ப செலவிற்காக சம்பாதிக் கின்றனர். விழுப்புரத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கிய நிலையில் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தை பிரம்மாண்ட மாக திரட்டுகின்றனர். இதன் காரணமாக திண்டிவனம் மற்றும் கிராமப்புறங்களில் கூலி ஆட்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.காய்கறி சாகுபடி கூலி வேலைக்குச் செல்வோருக்கு தினசரி கூலியாக 100 முதல் 120 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டியதுள்ளது. ஆனால் தேர்தல் பிரசாரம் அப்படி இல்லை. 
காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் தேர்தல் பிரசாரத்திற்காக அந்தந்த தெருக்களில் சென்று ஓட்டு கேட்டாலே போதுமானது. தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் நபர்களுக்கு தினமும் கூலியாக 300 ரூபாய் வரை, மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கி வருகின்றனர். 
அத்துடன் தாக சாந்திக்கான குடிமகன் களுக்கு குவாட்டரும் கிடைகிறது. இதன் காரணமாக திண்டிவனம் மற்றும் கிராமப்புறங் களில் விவசாயிகள் கூலி வேலைக்குச் செல்லாமல் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Label