OUR CLIENTS
வறண்டு கிடக்கும் மூலவைகை!
வறண்டு கிடக்கும் மூலவைகை! Posted on 27-Mar-2019 வறண்டு கிடக்கும் மூலவைகை!

வருசநாடு, மார்ச் 27- 

 கடமலை மயிலை ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டு 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த 18 ஊராட்சி மன்றங்களும் மூல வைகை ஆற்றின் மூலம்  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நீர்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வெள்ளிமலை, போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்யவில்லை. எனவே, இதனைத் தொடர்ந்து கடமலை   மயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை போன்ற பகுதிகளில்  ஆழ்துளை கிணறு மூலம் தனியார் தோட்டங்களில் இருந்து தள்ளு வண்டிகளில் பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் தனியார் தோட்டங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்திற் குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் மலைப்ப குதிகளில் உள்ள வனவிலங்குகளும் தண்ணீர் தேடி தனியார் தோட்டங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக மான், கரடி, கேளை ஆடு உள்ளிட்டவரை குடிநீரை தேடிவரும் போது வாகனம் மோதி உயிரிழந்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து விலங்குகளை காப் பாற்றும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது

Label