OUR CLIENTS
வேலூரில் நேற்று காலை சர்வீஸ் டிப்போவில் தீ விபத்து-3 பஸ்கள் கருகி சேதம்!
வேலூரில் நேற்று காலை சர்வீஸ் டிப்போவில் தீ விபத்து-3 பஸ்கள் கருகி சேதம்! Posted on 27-Mar-2019 வேலூரில் நேற்று காலை சர்வீஸ் டிப்போவில் தீ விபத்து-3 பஸ்கள் கருகி சேதம்!

வேலூர், மார்ச் 27-

 வேலூரில் நேற்று காலை தனியார் பஸ் சர்வீஸ் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3  பஸ்கள் எரிந்து சேதமானது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலை ஓரத்தில் விருபாட்சிபுரத்தை சேர்ந்த பட்டாபி என்பவர் தனியார் பஸ் சர்வீஸ் டிப்போவை நடத்தி வருகிறார். 

இங்கு எப்சிக்கு செல்லும் பஸ்கள் சர்வீஸ் செய்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 8.15 மணியளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றியுள்ளது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் தீ மள மளவென பரவியது. 
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அறுமுகம் தலைமையில் 2வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த 3 பஸ்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. ஆனால் தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் தப்பிது. 
இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Label