OUR CLIENTS
தேமுதிகவினர் தொடர் மந்தம் விஜயகாந்திடம் புகார்!
தேமுதிகவினர் தொடர் மந்தம் விஜயகாந்திடம் புகார்! Posted on 27-Mar-2019 தேமுதிகவினர் தொடர் மந்தம் விஜயகாந்திடம் புகார்!

வேலூர், மார்ச் 27-

விஜயகாந்தை சந்திக்கும் கூட்டணி கட்சி வேட் பாளர்கள் தே.மு.தி.க., நிர்வாகிகள் மீது புகார் கூற தொடங்கியுள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி தே.மு.தி.க., தலைமை உள்ளது. 
எனவே விஜயகாந்த் மனைவி பிரேலமதா தேர்தல் பிரசாரத்தை 27ல் (இன்று) தொடங்க உள்ளார். விருதுநகர், திருச்சி தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் கட்சியின் நிர்வாகிகள் எல்லாரும் களமிறக்கப்பட்டு உள்ளனர். 
இதனால் அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற தே.மு.தி.க.,வினர் இல்லை. 
இது குறித்து விஜய காந்தை சந்தித்து புகார் செய்ய தொடங்கிஉள்ளனர். சமீபத்தில் திருவள்ளூர் தனித் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வேணு கோபால் விஜயகாந்தை சந்தித்தார். 
திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க., பொறுப்பாளரும், மாநில துணை செயலருமான பார்த்தசாரதி தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்றும் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் அவர் முகாமிட்டிருப் பதாகவும் புகார் கூறினார். மேலும் மாவட்ட நிர்வாகிகளும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்றும் குற்றம் சாட்டினார். 
அதேபோல தென் சென்னை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்த்தனும் விஜயகாந்தை சந்தித்து மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் பா.ம.க., வேட்பாளர் வைத்திய லிங்கம் விஜயகாந்தை சந்தித்தார்.  
தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கமாக உள்ளனர். தீவிரமாக பணியாற்றும் படி அவர்களுக்கு உத்தரவிடுங்கள் என வலியுறுத்தினார்.

Label