OUR CLIENTS
பெட்ரோல் டோக்கன்கள் பறிமுதல்!
பெட்ரோல் டோக்கன்கள் பறிமுதல்! Posted on 27-Mar-2019 பெட்ரோல் டோக்கன்கள் பறிமுதல்!

பண்ருட்டி, மார்ச் 27-

பண்ருட்டி அருகே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட பயன்படுத்தப்பட்ட 127 டோக்கன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தி.மு.க., வேட்பாளர் ரமேஷை ஆதரித்து நடிகர் உதயநிதி  ஸ்டாலின் 24ம் தேதி பிரசாரம் செய்தார். இந்நிலையில் அங்குசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் சிலர் டோக்கன் முறையில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். பண்ருட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படையினர் டோக்கன் முறையில் பெட்ரோல் நிரப்பிய பங்க் ஊழியர் ரவிச்சந்திரனை பிடித்து அவரிடம் இருந்து 127 டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.டோக்கன்கள் சிலவற்றில் உதயநிதி நற்பணி மன்றம் என குறிப்பிடப்பட்டிருந்தது. டோக்கன்கள், பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அவரது புகாரின்படி புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
சீர்காழி
மயிலாடுதுறை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆசைமணி. இவர் 24ம் தேதி, சீர்காழி நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அமைச்சர் மணியன், பாரதி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.முன்னதாக அவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் பெட்ரோல் போட டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதை தொண்டர்கள் எடுத்து சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பங்க்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த சிறப்பு தாசில்தார் சாமிநாதன் தலைமையில் பறக்கும் படையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட டோக்கன்களையும், 10 ஆயிரத்து 870 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.டோக்கன்கள் அனைத்திலும் சீர்காழி நகர அ.தி.மு.க., செயலர் பக்கிரிசாமி பெயர் அச்சிடப்பட்டு வரிசை எண்கள் எழுதப்பட்டிருந்தன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Label