OUR CLIENTS
தேர்தலில் போட்டியிட வேண்டாம்-பாஜக! முரளி மனோகர் ஜோஷி கவலை...
தேர்தலில் போட்டியிட வேண்டாம்-பாஜக! முரளி மனோகர் ஜோஷி கவலை... Posted on 27-Mar-2019 தேர்தலில் போட்டியிட வேண்டாம்-பாஜக! முரளி மனோகர் ஜோஷி கவலை...

புதுடெல்லி, மார்ச் 27-

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜக தன்னிடம் தெரிவித்ததாக முரளி மனோகர் ஜோஷி செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, தனது கான்பூர் தொகுதி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்ததாவது: அன்புள்ள கான்பூர் தொகுதி மக்களுக்கு, 2019 மக்களவைத் தேர்தலில் கான்பூர் மட்டுமல்லாது எந்த தொகுதியிலும் நான் போட்டியிடக்கூடாது என பாஜக தேசிய செயலர் ராம்லால் தெரிவித்துவிட்டார் என கடிதத்தில் முரளி கூறியுள்ளார். முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட தனது வாரணசி தொகுதியை விட்டுக்கொடுத்து, கான்பூர் தொகுதியில் முரளி மனோகர் ஜோஷி களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. அத்வானி போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக தேர்தல் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 
நரேந்திர மோடி, அமித் ஷா, உமாபாரதி ஆகியோரின் பெயர்கள் தேர்தல் பிரச்சார் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Label