OUR CLIENTS
ஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம்
ஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம் Posted on 27-Mar-2019 ஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம்

கொல்கத்தா, மார்ச் 27-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2019 சீசனின் 6-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கிறிஸ் லின், 2. சுனில் நரைன், 3. உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. ஷுப்மான் கில், 6. தினேஷ் கார்த்திக், 7 ரஸல், 8 பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. கிருஷ்ணா, 11. பெர்குசன்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கிறிஸ் கெய்ல், 2. கேஎல் ராகுல், 3. மயாங்க் அகர்வால், 4. சர்பிராஸ் அகமது, 5. டேவிட் மில்லர், 6. மந்தீப் சிங், 7. அண்ட்ரிவ் டை, 8. அஸ்வின், 9. முகமது ஷமி, 10. ஹார்டஸ் வில்ஜோன், 11. வருண் சக்கரவர்த்தி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார்.இவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டியாகும்.

Label