OUR CLIENTS
புலி பதுங்குவது பாய்வதற்கு தான் - மு.க.ஸ்டாலின் சூளுரை
புலி பதுங்குவது பாய்வதற்கு தான் - மு.க.ஸ்டாலின் சூளுரை Posted on 30-Jun-2019 புலி பதுங்குவது பாய்வதற்கு தான் -  மு.க.ஸ்டாலின் சூளுரை

விழுப்புரம்,  ஜூன் 30-

புலி எப்பொழுது பதுங்குமென்றால், பாய்வதற்குத் தான் பதுங்கும், ஓடி ஒளிவதற்கு பதுங்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  சூளுரைத்தார்.

மறைந்த விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு. ராதாமணியின் நினைவேந்தல் நிகழ்வு, படத்திறப்பு விழா, அவரது சொந்த ஊரான, விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்களால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கின்றது என்பது உண்மை. யாரும் எதிர்பார்க்காத நிலையில், அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அது நடக்காத ஒரு சூழ்நிலை அமைந்திருக்கிறது. 

திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்று ஒரு குறை தமிழக மக்களிடம் இருக்கிறது. விரைவில் இங்கு ஆட்சி மாற்றம் வரும். எனவே தமிழக மக்கள் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம்.

3 சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு திட்டமிட்டார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. எனவே, ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். 3 எம்எல்ஏக்கள் பதவியை எக்காரணத்தைக் கொண்டும் பறிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் தடை உத்திரவு பிறப்பித்தது. எனவே தான் இந்த விவகாரத்தில் ஜனநாயக முறையோடு, கருணாநிதி கற்றுத் தந்த ராஜதந்திரத்தை திமுக பயன்படுத்தியது.

உடனே எல்லா பத்திரிகைகளிலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்து விட்டு திமுக பதுங்குகிறது என்கிறார்கள்.  திமுக என்ற புலி எப்பொழுது பதுங்குமென்றால், பாய்வதற்கு தான் பதுங்கும், ஓடி ஒளிவதற்கு பதுங்காது.  பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம், முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Label