OUR CLIENTS
ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும்: மன் கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும்: மன் கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் Posted on 30-Jun-2019 ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும்: மன் கீ பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 30-

நாட்டு மக்கள் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி உரையில் இன்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றது. இதனால் 2வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக அவர் மன் கீ பாத் வானொலி (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இன்று பேசினார்.   ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக மோடி உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதன் சுருக்கம்:  
“பிப்ரவரி மாதத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தேன். மக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். என்று பிரதமர் மோடி கூறினார்.  நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற 2வது முறையாக பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளித்துள்ளனர். 61 கோடி வாக்காளர்களும் தங்களது கடமையை செய்தனர். இது உலகின் மிக பெரிய ஜனநாயக தேர்தல். அருணாசல பிரதேசத்தில் ஒரு வாக்காளருக்காக வாக்கு மையம் அமைக்கப்பட்டது. 

எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்தி கொண்டேன். ஆனால் இதனை சிலர் அரசியலாக்கினர்.  அவசரநிலை அமல்படுத்தப்பட்ட பொழுது, அதற்கு எதிராக அரசியல் வட்டம் அல்லது அரசியல்வாதிகள் ஆகியோர் மட்டும் நின்றுவிடவில்லை. சிறையில் அடைக்கப்பட்டதுடன் இந்த விசயம் நின்று விடவில்லை. ஒவ்வொருவரின் மனசாட்சியிலும் அந்த கோபம் உள்ளது.

நாட்டில் தண்ணீரின் முக்கியத்துவத்தினை கவனத்தில் கொண்டு ஜலசக்தி என்ற புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டது. இதனால் அனைத்து நீர் சார்ந்த விவகாரங்களுக்கும் வேகமுடன் முடிவு எடுக்க முடியும் என பிரதமர் மோடி கூறினார்.   தண்ணீர் பிரச்னையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன். ஒவ்வொரு மழைத்துளி நீரையும் சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராம தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன்.  நீரை சேமிக்க, நூற்றாண்டு காலமாக நாம் கடைபிடித்த பழங்கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும்.  தண்ணீர் அவசியம், சேமிப்பு , தண்ணீர் குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து நாம் அனைவரும் பிரசாரம் செய்ய வேண்டும்.

#Janshakthi for Jalashakti என்ற ஹேஷ்டாக்கில் தண்ணீர் தொடர்பான விஷயங்களை பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

Label