OUR CLIENTS
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் ஜே.கே.திரிபாதி!
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் ஜே.கே.திரிபாதி! Posted on 30-Jun-2019 தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் ஜே.கே.திரிபாதி!

சென்னை, ஜுன் 30- 
  
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். 

சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே. திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், புதிய டிஜிபியான ஜே.கே.திரிபாதியிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள திரிபாதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், காவல் ஆணையராகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், தென் மண்டலம், சிபிசிஐடி ஐஜியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சிறந்த சேவைக்கான காவலர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Label