OUR CLIENTS
தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றார் !
தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றார் ! Posted on 30-Jun-2019 தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றார் !


 சென்னை, ஜூன் 30- 
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார். 

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சண்முகம் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராக இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார். 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், 1985 ஆம் ஆண்டு நேரடியாக ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். 2010-ஆம் ஆண்டு நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 9 வருடங்களாக அந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

Label