OUR CLIENTS
இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்
இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் Posted on 01-Jul-2019 இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்


நாமக்கல், ஜூலை 1-

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் திட்டமிட்டபடி இன்று முதல் கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் பாட்லிங் பிளாண்டுகளுக்கு சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனஇதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லைஅனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கடந்த 20-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடு படுவோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, இன்று காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4,500 டேங்கர் லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை டேங்கர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும். இதனால் தென் மண்டலத்திற்கு உட்பட்ட இந்த 6 மாநிலங்களிலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை.

இவ்வாறு சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் கூறினார். ஆயில் நிறுவனங்கள் சார்பில் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Label