OUR CLIENTS
பாதுகாப்பான ரயில் பயணம் உறுதி
பாதுகாப்பான ரயில் பயணம் உறுதி Posted on 01-Jul-2019 பாதுகாப்பான ரயில் பயணம் உறுதி


புதுடெல்லி, ஜூலை 1------------

ரயில்களில் ரயில்வே போலீசாரின் கண்காணிப்பை நூறு விழுக்காடு உறுதிப்படுத்தும் வகையில், க்யூ ஆர் கோட் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.

தமிழகத்தில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு ரயிலுக்கு தலா இரு ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் தங்களுக்கான பணி நேரம் முழுவதும் ரயில் பெட்டிகளில் தீவிர கண்காணிப்பிலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். அவ்வாறு பணியில் இருக்கும் காவலர்கள் முழு விழிப் புடனும், அர்ப்பணிப்புடனும் செயல் படுகின்றனரா? என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய முறை ஒன்றை ரயில்வே காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, ரயில்களில் உள்ள நான்கு பெட்டிகளில் கியூ ஆர் கோட் அச்சிடப்பட்ட பலகை பொருத்தப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட ரயிலில் பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், முதலாவது பெட்டியில் இருக்கும் கியூ ஆர் கோட் பலகையில், தங்களது செல்போன்களை காண்பித்து, கோட்- ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யும் போது, அந்தக் காவலரின் விவரங்கள் ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பரிமாற்றப்பட்டு, அவர் பணியில் இருப்பது உறுதி செய்யப்படும். மேலும், ரயில் நிலையங்களிலும் கியூ ஆர் கோட் பலகை இருக்கும். ரயில்கள் நின்று செல்லும் நிலையங்களில் எல்லாம், காவலர்கள் இதேபோல் செய்து தாங்கள், கண்காணிப்புப் பணியில் விழிப்புடன் இருப்பதை கட்டுப்பாட்டறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் ரயிலில் உள்ள பெட்டிகளுக் கெல்லாம் போலீசார் ரோந்து செல்கின்றனரா? என்பதும் உறுதி செய்யப்படும்ரயிலில் உள்ள 4 பெட்டிகளில் உள்ள கியூ ஆர் கோட்-ஐயும் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலீசார் ஸ்கேன் செய்ய வேண்டும்முதற்கட்டமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி, ராக்போர்ட், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், கியூ ஆர் கோட் முறை அமலுக்கு வருகிறது

அடுத்த சில நாட்களில் அனைத்து ரயில்களுக்கும், இது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் பயணிகளுக்கும், அவர்களது உடைமைகளுக்குமான பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படும்.

 

  

இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு ஜம்முவில் இருந்து வாகனங்களில் நேற்று காலை புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் கே.கே.சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் குழுவில் 2,200 பேர் செல்கின்றனர். இதில் 1,839 ஆண்கள், 333 பெண்கள் 17 குழந்தைகள், 45 சாதுக்கள், சன்னியாசினிகள் 93 வாகனங்களில் பயணம் செய்கின்றனர் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது

 

Label