OUR CLIENTS
டிராக்டர் குட்டையில் விழுந்து 4 பேர் பலி
டிராக்டர் குட்டையில் விழுந்து 4 பேர் பலி Posted on 01-Jul-2019 டிராக்டர் குட்டையில் விழுந்து 4 பேர் பலி


ஜெய்ப்பூர், ஜூலை 1&

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று டிராக்டர் குட்டையில் விழுந்த விபத்தில் அதை ஓட்டிச் சென்றவர் மற்றும் 3 பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி நேற்று தனது மூன்று பேரக் குழந்தைகளுடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

காலை 9.30 மணியளவில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் உள்ள ஒரு குட்டையில் விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்றவர் உள்பட நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Label