OUR CLIENTS
வைகோ எதிர்க்கிறாரா? அப்போ அது நல்ல திட்டமா தான் இருக்கும் & தமிழிசை
வைகோ எதிர்க்கிறாரா? அப்போ அது நல்ல திட்டமா தான் இருக்கும் & தமிழிசை Posted on 01-Jul-2019 வைகோ எதிர்க்கிறாரா?  அப்போ அது நல்ல திட்டமா தான் இருக்கும் & தமிழிசை


திருச்சி, ஜூலை 1&

வைகோ எதிர்க்கும் திட்டம் நல்ல திட்டமாக தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, 2012 -ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் தொடங்கி வைத்ததாகவும், அப்போது அந்த கூட்டணியில் இருந்த வைகோவே, தற்போது இத்திட்டத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். வைகோ எந்த திட்டத்தை எதிர்த்தாலும் அது நல்ல திட்டமாகத் தான் இருக்கும் என தமிழிசை கூறினார்.

மேலும், மத்திய அரசு செயல்படுத்தும் எல்லா திட்டங்களையும் சிலர் விமர்சனம் செய்வதாக தெரிவித்த அவர், அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம் என தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்னை விவகாரத்தில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசை விமர்சித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என கூறிய தமிழிசை, குடிநீர் பிரச்னை குறித்து பேச தி.மு. விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த தொலைநோக்கு திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய தி.மு., தற்போது ஜோலார் பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் விஷயத்தில், மாவட்டங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது எனக் கூறிய அவர், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்னை இருக்காது என தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறார் என்றும், புலி பதுங்குவது பாயத்தான் என கூறினாலும், ஸ்டாலின் பூனையாக தான் தெரிவதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Label