OUR CLIENTS
சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு அரசே காரணம் கிரண்பேடி குற்றச்சாட்டு!
சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு அரசே காரணம் கிரண்பேடி குற்றச்சாட்டு! Posted on 01-Jul-2019 சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு அரசே காரணம்  கிரண்பேடி குற்றச்சாட்டு!


புதுச்சேரி, ஜூலை 1&

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று தமிழக அரசு மீது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பெரு நகரங்களில் ஒன்றான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளதாகவும், மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களின் சுயநல எண்ணமும், மோசமான அணுகுமுறையும் கூட இந்த பிரச்னைக்கு காரணம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

 

Label