OUR CLIENTS
கேரளா விபத்தில் உயிரிழப்பு தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு
கேரளா விபத்தில் உயிரிழப்பு தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு Posted on 01-Jul-2019 கேரளா விபத்தில் உயிரிழப்பு  தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு


சென்னை, ஜூலை 1&

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த 12 பேர் சென்ற ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் 6 பேர்  நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

 

Label