OUR CLIENTS
தொழிற்சாலையை மூட வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!
தொழிற்சாலையை மூட வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்! Posted on 29-Mar-2019 தொழிற்சாலையை மூட வலியுறுத்தி  தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

கும்மிடிப்பூண்டி, மார்ச் 29-

 மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நாகராஜகண்டிகை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, நாகராஜகண்டிகை கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தனியார் தொழிற்சாலை தற்போது வேறு பெயரில் திறக்கப்பட்டு உள்ளது. 
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய அந்த தொழிற்சாலையை, திறக்கக் கூடாது என வலியுறுத்தி நாகராஜகண்டிகை கிராம மக்கள் பல போராட்டங்கள் மேற்கொண்டனர். எதிர்ப்பை மீறி தொழிற்சாலை திறக்கப்பட்டதால் கடந்த 26ம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை வீசி சென்றனர்.அதன் தொடர்ச்சியாக நாகராஜ கண்டிகை கிராமத்தில் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நேற்றுமுன்தினம் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் மேற் கொண்டனர். 
கிராமத்தின் மத்தியில் பந்தலிட்டு கறுப்பு கொடிகளுடன் கிராம பெண்கள் அமர்ந்திருந்தனர். அனைத்து மின் கம்பங்களிலும் கறுப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஆர்.டி.ஓ., நந்தகுமார் தலைமையிலான வருவாய் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் சமாதானம் பேசினர். 
தொழிற்சாலையை இயக்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்றுள்ளனர். மாசு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலை இயங்குகிறதா? என்பதை கண்காணிப்போம்.
 மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து கிராம மக்கள் தொழிற்சாலையை மூட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Label