OUR CLIENTS
முறையான குடிநீர் வழங்க வேண்டுகோள்!
முறையான குடிநீர் வழங்க வேண்டுகோள்! Posted on 29-Mar-2019 முறையான குடிநீர் வழங்க வேண்டுகோள்!

சேலம், மார்ச் 29-
சங்ககிரி, புள்ளிபாளையம், அருந்ததியர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. காவிரி நீரும், மாதம் ஒருமுறை தான் கிடைக்கிறது. இதனால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து, ஊராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.கோடை தொடங்கி விட்ட நிலையில் தவித்த  வாய்க்கு தண்ணீர் தருவார்களா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதிவாழ் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Label