OUR CLIENTS
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை Posted on 01-Jul-2019 ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை


புதுடெல்லி, ஜூலை 1-

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசுபாடு, புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. ஸ்பெயின், கிரீஸ், மாசிடோனியா, பல்கேரியா, போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 110 டிகிரியை எட்டியுள்ளது. பிரான்சின் கல்லார்கூஸ் நகரில் நேற்றுமுன்தினம் 115டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 2003ம் ஆண்டு இங்கு 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதே இதுவரை உச்சபட்சமாக இருந்த நிலையில், தற்போது அதையும் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் மக்கள் நீர்நிலைகளில் குவியும் நிலையில், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மதித்து, பாதுகாப்பு பணிகளில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

Label