OUR CLIENTS
2 குழந்தைகளுடன் இளவரசி தலைமறைவு
2 குழந்தைகளுடன் இளவரசி தலைமறைவு Posted on 01-Jul-2019 2 குழந்தைகளுடன் இளவரசி தலைமறைவு


துபாய், ஜூலை 1-

துபாய் இளவரசியான ஹயா பல மில்லியன் பவுண்டு பணத்துடனும் தமது குழந்தைகளுடனும் தலைமறைவாகி விட்டார். அவர் லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான சேக் முகமது பின் ரசீத்தின் 6வது மனைவியான ஹயா, 31 மில்லியன் பவுண்டு பணத்தையும் சுருட்டிக் கொண்டு புதிய வாழ்க்கையை வாழ லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமது இரண்டு குழந்தைகளுடன் முன்னதாக ஜெர்மனிக்கு சென்ற ஹயா அங்கு அடைக்கலம் கோரியதாகவும் விவாகரத்து கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவரான இளவரசி ஹயா, மே 20 முதல் தலை மறைவான பின்னர், அவரின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.

துபாயில் இருந்து ஹயா தப்பிச் செல்ல ஜெர்மனியின் சில அதிகாரிகள் உதவியதாகவும் கூறப்படுகிறது.

 

 

Label