OUR CLIENTS
சென்னையில் புகார் கொடுப்பவர்களை அலைகழிக்கும் காவல் ஆய்வாளர்கள்!
சென்னையில் புகார் கொடுப்பவர்களை அலைகழிக்கும் காவல் ஆய்வாளர்கள்! Posted on 01-Jul-2019 சென்னையில் புகார் கொடுப்பவர்களை அலைகழிக்கும் காவல் ஆய்வாளர்கள்!


சென்னை, ஜூலை 1-

 சென்னையைச் சுற்றியுள்ள காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் சிலர் செய்யும் தவறான செயல்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் மக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளது. சில காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தவறான முறையில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்கின்றனர். இந்த எஃப்ஐஆர்ஐ எம்எஃப் செய்ய எதிர் மனுதாரரிடத்திலும் கறாராக பணம் பறிக்கின்றனர் பலே ஆய்வாளர்கள். இது மட்டுமின்றி காவல் துறையை நம்பிக்கையுடன் நமக்கு நியாயம் பெற்றுத் தருவார்கள் என்று நாடி வரும் பொதுமக்களை மிகவும் அவதிப்படச் செய்கின்றனர். புகார் கொடுக்க வருவோரிடம் நாளை வா, நாளை வா என்று சொல்லியே அலை கழிப்பதால் தவறு செய்யாதவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு காவல்துறையினர் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இதனைப் பற்றிய புகாரை மேல் அதிகாரிகளிடம் கூறினால் நீங்கள் எங்கு சென்று சுற்றினாலும் இங்குதான் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று மிரட்டுகின்றனர். இந்த ஆய்வாளர்கள் செய்யும் அடாவடித் தனமும், அவர்களது லீலைகளும் மிக விரைவில் விரிவாக வெளியாகும்.

Label