OUR CLIENTS
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு Posted on 29-Mar-2019 கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு

வாஷிங்டன், மார்ச் 29-

அமெரிக்காவுக்கே தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்திற்கு அல்ல என்று கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உறுதிபடத் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனாவில் கூகுளின் வர்த்தக நடவடிக்கைகள் அந்நாட்டிற்கும், அந்நாட்டு ராணுவத்திற்குமே உதவுவதாக ஏற்கெனவே டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சுந்தர் பிச்சை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா ராணுவத்திற்கே தாம் முழுமையாக கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்திற்கு அல்ல என்று சுந்தர் பிச்சை உறுதிபடத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

Label