OUR CLIENTS
தண்ணீர்ப் பிரச்சனையில் அரசுகள் அக்கறை காட்டவில்லை
தண்ணீர்ப் பிரச்சனையில் அரசுகள் அக்கறை காட்டவில்லை Posted on 01-Jul-2019 தண்ணீர்ப் பிரச்சனையில் அரசுகள் அக்கறை காட்டவில்லை


சென்னை, ஜூலை 1-

தண்ணீர்ப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்று மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டினார்.

 குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி பாரிமுனையில் சென்னை கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி பேசியது:

 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் காரணமாக சென்னைக்கு ஓரளவு குடிநீர் கிடைத்து வருகிறது. ஆனால், அதற்குப் பிறகு எந்தத் திட்டத்தையும் முறையாகச் செயல்படுத்தாததால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

 ஆரம்பத்தில், தண்ணீர்ப் பஞ்சமே இல்லை எனக் கூறி வந்த அரசு, இப்போது திமுகவின் போராட்டத்துக்குப் பிறகு பஞ்சம் இருக்கிறது என ஒத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து உலக நாடுகள் எல்லாம்கூட கவலைப்படுகின்றன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

Label