OUR CLIENTS
வேலூரில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்!
வேலூரில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்! Posted on 01-Apr-2019 வேலூரில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்!

வேலூர், ஏப்.1-
வேலூரில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணத்தை வருமானவரித் துறையினர் இன்று காலை பறிமுதல் செய்தனர்.
தனியார் கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது பணத்தை பறிமுதல் செய்ததாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது, திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக, காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலிருந்து நள்ளிரவு வேளைகளில் அப்பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும்,  இப்பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா? எனவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Label