OUR CLIENTS
முறைகேடுகள் நடந்தால் வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பவும்- தேர்தல் ஆணையர்கள் அறிக்கை!
முறைகேடுகள் நடந்தால் வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பவும்- தேர்தல் ஆணையர்கள் அறிக்கை! Posted on 04-Apr-2019 முறைகேடுகள் நடந்தால்  வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பவும்- தேர்தல் ஆணையர்கள்  அறிக்கை!

முறைகேடுகள் நடந்தால்  வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பவும் 
தேர்தல் ஆணையர்கள் அறிக்கை!

 சென்னை, ஏப்.4-
சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன், தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா மற்றும் அசோக் லவாசா இன்று  2வது  நாளாக ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

ஆலோசனைக்கு பின்னர் தேர்தல் ஆணையர்கள் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:    வரும் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வந்துள்ளன. 

பதற்றமான வாக்குச்சாவடிகளில், மத்திய போலீஸ் படையை நிறுத்தவும், விதிமீறல்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கவும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 8,787 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள்ளது. 

சென்னையில், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 19,655 உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் CVIGIL என்ற செயலி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். இதன்மூலமாக தங்கள் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்தால், அதனை புகைப்படங்கள்அல்லது வீடியோக்களாக எடுத்து செயலியில் அப்லோட் செய்யலாம். இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக செல்லும். மேலும், தேர்தல் குறித்த தகவல்கள், வாக்குச்சாவடி குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள 1950 என்ற மொபைல் எண்ணை அழைக்கவும். 

பூத் சிலிப்பை வைத்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது. பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.   இவ்வாறு தேர்தல் ஆணையர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் தெரிவித்துள்ளனர்.

Label