OUR CLIENTS
அரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை!
அரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை! Posted on 01-Jul-2019 அரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை!


கோயம்புத்தூர், ஜூலை 1-

அரசு பஸ்களில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கை ஒதுக்காத டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் உள்ள இருக்கைகளில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என இருக்கை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும், இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் அவதிக்கு ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பயணிகள் முதல்வர் தனிப்பிரிவிற்கும், போக்குவரத்து செயலாளருக்கும் புகார்கள் அளித்தனர். இந்நிலையில் அரசு பஸ்களில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட வணிக பிரிவு மேலாளர் அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பெண்களுக்கான இருக்கைகளில் ஆண்கள், வாலிபர்கள் அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பஸ்களில் இருக்கை ஒதுக்கீடு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும், இது குறித்து பயணிகள் புகார்கள் அளிக்கும் பட்சத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Label