OUR CLIENTS
அதிமுக பேனர்களை கிழித்தெரிந்த அமமுகவினர்!
அதிமுக பேனர்களை கிழித்தெரிந்த அமமுகவினர்! Posted on 04-Apr-2019 அதிமுக பேனர்களை கிழித்தெரிந்த அமமுகவினர்!

 அதிமுக பேனர்களை கிழித்தெரிந்த அமமுகவினர்!

 மதுரை, ஏப்.4-
பி.கே.மூக்கையாத்தேவரின் பிறந்தநாள் அனுசரிப்பின் போது அதிமுக பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முன்னாள் பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் மூன்றுமுறை உசிலம்பட்டியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 97வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையிலான அமமுக கட்சியினர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, வெளியே அதிமுகவினர் பேனர் வைத்திருப்பதை கண்ட அமமுக கட்சி தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் பேனர் வைத்திருப்பதை கண்டித்து பேனர்களை கிழித்து எரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

 

Label