அத்தி வரதரை இன்று முதல் தரிசிக்க ஏற்பாடு! Posted on 01-Jul-2019
காஞ்சிபுரம்,
ஜூலை 1-
காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நகராட்சி சார்பில் உள்ளூர் மக்களுக்காக எட்டு இடங்களில் பாஸ் வழங்கப்படுகிறது.
அதை
பெற நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர். அனைத்து நாட்களிலும் ஆதார் அட்டை பதிவு செய்து பாஸ் பெற்று கொள்ளலாம். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த மண்டபத்தில் அத்தி வரதர், இன்று முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது .மேலும் உள்ளூர் மக்கள் தரிசனத்திற்காக அவரவர் ஆதார் அட்டையை பதிவு செய்து பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில், டி.ஆர்., நகராட்சி
பள்ளி, விளக்கடி கோவில் தெரு, டி.கே. நம்பி
தெரு, நசரத்பேட்டை, எல்லப்பா நகர், பிள்ளையார்பாளையம், நகராட்சி அலுவலகம், புதிய காவல் நிலையம் அருகில் ஆகிய எட்டு இடங்களில் பாஸ் வழங்கப்படுகின்றது. அந்தந்த மையங்களில் ஏராளமான மக்கள் நேற்றுமுன்தினம் பாஸ் வாங்க காத்திருந்தனர். இந்த பாஸ் 48 நாட்களுக்கும் தினசரி காலை 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் விரும்பிய நாட்களில் பாஸ் பெற்று தரிசனம் செய்யலாம் என நகராட்சி சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 48 நாட்கள் பொதுமக்கள் அத்தி வரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதரை பார்க்க பக்தர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.