OUR CLIENTS
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்காது-!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்காது-! Posted on 02-Jul-2019 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்காது-!

புதுடெல்லி, ஜூலை 2-
தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக ஹைடிரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஹைடிரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.ஆர். பாலு ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில்,2,000 அடியில் துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமல்ல, மனித உயிருக்கும் கேடு விளைவிக்கும் என்று தெரிவித்த அவர், இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்தான், அதற்காக உயிர்நாடியான விவசாயத்தை அழிக்க வேண்டாம்.

பணக்கார நாடாக இந்தியா இருக்க நாம் விரும்பவில்லை, மாறாக, ஆரோக்கியமான நாடாக இருக்க வேண்டும். நாங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இதுபோன்ற திட்டத்தை மனிதர்கள் இல்லாத பாலைவனம் போன்ற ஓரிடத்தில் செயல்படுத்துங்கள். ஹைட்ரோகார்பன் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களவைவையில் இதே கருத்தை வலியுறுத்தி திமுக உறுப்பினர் டி.ஆர் பாலுவும் பேசினார். இதையடுத்து டி.ஆர் பாலு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைடிரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என தெரிவித்தார்.

ஹைடிரோ கார்பன் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வரவில்லை. முந்திய அரசுதான் கொண்டு வந்தது. இது முன்னாள் அமைச்சரான டி.ஆர். பாலுவுக்குத் தெரியும் என்று மத்திய அமைச்சர் பிரதான் கூறினார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 0.6 சதவீதம்தான் காவிரிப் படுகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவு முதலீடு அடிப்படையில் பார்க்கும் பொழுது கட்டுபடியாகக் கூடியது அல்ல. சமூகப் பொருளாதார ரீதியிலும் பலன் தருவதாக இல்லை என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டார்.  அதனால் தமிழக ஹைடிரோ கார்பன் கிணற்றுத் திட்டங்களை மத்திய அரசு கைவிடலாம் என டி.ஆர். பாலு கேட்டுக்கொண்டார்.

Label